மேலும் செய்திகள்
கிணற்றில் மூழ்கி மாணவர் பலி
24-Dec-2024
கிணற்றை காணோம்
29-Dec-2024
கம்பம்:தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள, க.புதுப்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்ன மொக்கை என்பவர் மனைவி முருகேஸ்வரி, 28. குடும்பச்சண்டை காரணமாக முருகேஸ்வரி ரெட்டை புளி ரோட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அம்சராஜா மகன் பரத், 26, என்பவர் முருகேஸ்வரியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். அருகில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் குதித்து முருகேஸ்வரியை துாக்கி காப்பாற்றினர். ஆனால் பரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினர் கிணற்றில் போராடி, பரத்தின் உடலை மீட்டனர்.
24-Dec-2024
29-Dec-2024