உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புற்றுநோயாளியை கட்டிப்போட்டு சிகிச்சை பணத்தை திருடிய நபர்

புற்றுநோயாளியை கட்டிப்போட்டு சிகிச்சை பணத்தை திருடிய நபர்

மூணாறு: மூணாறு அருகே அடிமாலியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டிப்போட்டு விட்டு சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ 16,500 ஐ மர்ம நபர் திருடிச் சென்றார்.அடிமாலியில் எஸ்.என்.படி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சந்தோஷ். இவரது மனைவி உஷா 47, புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு அடிமாலி அருகே கல்லாரில் இருந்த 10 சென்ட் நிலம் வீடு ஆகியவற்றை விற்றார். அத்தொகை செலவானதால் அடிமாலியைச் சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ. 6 லட்சம் நிதி திரட்டப்பட்டு சிகிச்சைக்கு செலவிடப்பட்டது.இருதினங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய உஷா, நேற்று முன்தினம் கணவர் பணிக்கும், மகள் அதுல்யா பள்ளிக்கும் சென்றதால் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மர்ம நபர் உஷாவின் வாயில் துணியை திணித்து விட்டு சிகிச்சைக்கு செலவிட பணம் எங்கு வைக்கப்பட்டுள்ளது என கேட்டு மிரட்டினார். அதற்கு பதிலளிக்காததால் உஷாவை கட்டில் காலில் கட்டிப்போட்டு விட்டு வீடு முழுவதும் தேடினார். பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்தவர் உஷாவை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அதற்கு அஞ்சிய உஷா மணிபர்ஸ்சில் பணம் உள்ளதாக கூறினார். அதில் இருந்த ரூ. 16,500 ஐ எடுத்துக் கொண்டு மாயமானார். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை