பெரியகுளம்: மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் அவரது சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியகுளத்தில் அ.தி.மு.க., சார்பில் வடகரை பஸ்ஸ்டாண்டில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நகர செயலாளர் பழனியப்பன் மாலை அணிவித்தார். சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் முகமது சலீம், நகர துணை செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ஜெயசீலன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தேவதானப்பட்டியில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு மாலை அணிவித்தனர். பெரியகுளத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் சார்பில், தெற்கு அக்ரஹாரம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நகர செயலாளர் அப்துல்சமது மாலை அணிவித்தார். கவுன்சிலர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் முருகானந்தம், அன்பு, சேதுராமன், ராஜகோபால், ராஜவேல், பாலசுந்தரம், ராசு உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். அரண்மனைத்தெருவிலும் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்தனர். தேவதானப்பட்டி எம்.ஜி.ஆர்., சிலைக்கு ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, ஆண்டி மாலை அணிவித்தனர். ஆண்டிபட்டி: - அ.தி.மு.க., சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகர செயலாளர் அருண்மதிகணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சேட்டுஅருணாசலம், மேற்கு ஒன்றிய பொருளாளர் செல்வம் கிழக்கு ஒன்றிய தலைவர் மதியரசன், பொருளாளர் லோகநாதன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பொன்முருகன், மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேனி: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் நகர செயலாளர் ரங்கநாதன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் முருகேசன், ஜெயக்குமார், மயில்வேல் பங்கேற்றனர். பங்களாமேட்டில் நடந்த நிகழ்ச்சியில் வர்த்த பிரிவு நிர்வாகி நடேசன், நிர்வாகிகள் கருப்பு, கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.