உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அமைச்சர் ஆய்வு

 சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அமைச்சர் ஆய்வு

கம்பம்: கம்பத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிமேற்கொண்டு வருகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வினர் தங்களது கட்சியினர் ஓட்டுகள் விடுபட்டு போகாமல் இருக்க தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். கம்பம் தெற்கு, வடக்கு நகர் செயலாளர்கள் பால்பாண்டிராஜா, வீரபாண்டியன் தலைமையிலான தி.மு.க. வினர் ஒவ்வொரு வார்டிலும் உதவி மையங்களை அமைத்து பணியாற்றி வருகின்றனர். கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி வீதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அங்கிருந்த பி.எல்.ஓ. விடம் 2002 வாக்காளர் பட்டியலை எப்படி பார்க்கிறீர்கள், என்னென்ன ஆவணங்களை கேட்கிறீர்கள் என கேட்டறிந்தார். அதற்கு அருகில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் உதவி மையத்தில் தி.மு.க. வினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை பார்த்தார். அங்கிருந்த நகர் செயலாளர் பால்பாண்டிராஜாவிடம் விளக்கம் கேட்டார். அனைத்து வார்டுகளிலும் தலா ஒரு உதவி மையம் அமைத்து அந்தந்த வார்டை சேர்ந்த நிர்வாகிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை விளக்கினார். அமைச்சருடன் மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் சென்றனர். பின் சின்னமனூரிலும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை