| ADDED : பிப் 04, 2024 03:36 AM
தேனி : தமிழக அரசு சார்பில் நீர்நிலை பராமரிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு நீர்நிலை பாதுகாவலன் விருது வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.மாவட்டத்தில் மரங்கள் நட்டு பராமரிக்கும் தன்னார்வலர்கள் சார்பில் தேனி அருகே விருது வழங்கும் விழா நடந்தது. தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், அரசு சார்பில் பசுமைபள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பள்ளியில் சோலார் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படும்.அப்பள்ளிகளில் மூலிகைத்தோட்டம், காய்கறித்தோட்டம், குறுங்காடுகள் அமைக்கப்படும். இதுவரை மரங்கள் நட்டு பராமரிப்பவருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது போல் நீர்நிலைகள் பராமரிப்பவருக்கு நீர்நிலைபாதுகாவலன் விருது வழங்கப்பட உள்ளது என்றார்விழாவில் யுனிவர்செல் சின்டிகேட் நிர்வாகி நைனார்முகமது, எம்.எல்.ஏ., சரவணக்குமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன், பாலசங்கா நிர்வாக இயக்குனர் செந்தில்நாராயணன், கவுமாரியம்மன் உணவ நிர்வாக இயக்குனர் சுதாகர், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.