உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு இடைத்தேர்தல் 2 வார்டுகளில் விடுமுறை

மூணாறு இடைத்தேர்தல் 2 வார்டுகளில் விடுமுறை

மூணாறு: மூணாறு ஊராட்சியில் இடைத் தேர்தல் நடக்கும் இரண்டு வார்டுகளில் பிப்.22ல் உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டார்.மூணாறு ஊராட்சியில் 11(மூலக்கடை), 18 (நடையார்) ஆகிய வார்டுகளில் பிப்.22ல் இடைத் தேர்தல் நடக்கிறது. இரண்டு வார்டுகளிலும் 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பணிகளில் காங்கிரஸ், இடது சாரி கூட்டணி, பா.ஜ., ஆகிய கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.விடுமுறை: தேர்தல் நடக்கும் இரண்டு வார்டுகளிலும் பிப்.22ல் உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மது கடைகளை பிப்.20 மாலை 6:00 முதல் பிப்.23 மாலை 6:00 மணிவரை மூடவும் இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ