| ADDED : ஜன 25, 2024 05:58 AM
தேனி; உத்திரபிரதேசம், லக்னோவில் ஜன.,26 முதல் பிப்., 2 வரை நடக்க உள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க, தேனி பள்ளி மாணவர் விஷ்ணுபிரதாப் 14, தேர்வாகி உள்ளார்.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் ஒலிம்பியன் பாஸ்கரன் ஹாக்கி அகாடமி சார்பில், கடந்த டிசம்பர் 26 முதல் ஐந்து நாட்கள் 14 வயது பிரிவு தேசிய ஹாக்கி அணி வீரர்களுக்கான தேர்வு போட்டிகள் நடந்தன. இதில் 500 வீரர்கள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்டம், வெங்கடாசலபுரம் அரசு உதவி பெறும் வரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவர் பங்கேற்றனர். அதில் விஷ்ணுபிரதாப் 14 வயது பிரிவுப் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் தேசிய போட்டியில் ஜன. 26 முதல் பிப்., 2 வரை நடக்க உள்ள கே.டி.சிங் பாபு தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளார். மாணவர், உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ், பயிற்சியாளர் கோபி ஆகியோரை சபை நிர்வாக உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன், ஆசிரியர்கள் பாராட்டினர்.