உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்: சபரிமலை செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு

வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்: சபரிமலை செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேனி குமுளி ரோட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் இரவு பகல் பாராமல் விநாடிக்கு ஒரு வாகனம் என செல்கின்றன. வெளி மாநிலங்கள் இருந்து வருபவர்கள் உச்சபட்ச வேகத்தில் வாகனங்களை இயக்குவது தொடர்கிறது. ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டும், கம்பமெட்டு, குமுளி மலை ரோடுகளிலும், நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. கடந்த 3 நாட்களில் 3 விபத்துக்கள் கம்பம் நகருக்குள் மட்டும் ஏற்பட்டு 3 பேர் பலியாகி உள்ளனர்.எனவே போலீசார் ஆங்காங்கே சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி வேகத்தை குறைத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். அதேபோல தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும். அரசு போக்குவரத்து கழக டிரைவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். டிரைவர்கள் மன அழுத்தத்துடன் வாகனங்களை செலுத்தாமல் இருக்க அறிவுரை கூற வேண்டும். 'ஹெல்மெட்' அணியவில்லையா என்று அபராதம் விதிப்பது மட்டும் பணியல்ல. இது போன்ற விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள போலீசார் முன்வர வேண்டும். வட்டார போக்குவரத்து துறை கண்டுகொள்ளாமல் இருப்பதை தவிர்த்து அவர்களும் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ