உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி லோக்சபா தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல்; வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி

தேனி லோக்சபா தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல்; வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டும் அனுமதி

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் வேட்புமனு தாக்கலுக்கு தயார் நிலையில் உள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மனுத்தாக்கலை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ., துாரம் தடை செய்யப்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தி உள்ளனர். மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர், ஆதரவாளர்களின் 3 வாகனங்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படும். கார் பதிவெண்கள், வேட்பாளருடன் செல்லும் நபர்கள் பற்றிய விவரங்கள் அலுவலக நுழைவாயிலில் பதிவு செய்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.வேட்பாளருடன் வரும் கார்கள் வேட்பாளரின் செலவு கணக்குகளில் சேர்க்கப்பட உள்ளன. கலெக்டர் அலுவலக தெற்கு நுழைவாயிலில் உள்ள இரு கேட்டுகளில் ஒன்றை மூடி வைக்கப்படுகிறது. ஒரு கேட் வழியாக வந்து செல்ல அனுமதிக்கப்படும். கலெக்டர் அலுவலக வடக்கு பகுதி நுழைவு வாயில் வேட்பு மனுத்தாக்கல் முடியும் வரை மூடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை