உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவதானப்பட்டி அருகே கார் மோதி ஒருவர் பலி

தேவதானப்பட்டி அருகே கார் மோதி ஒருவர் பலி

தேவதானப்பட்டி : செங்குளத்துப்பட்டி பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்ற ஜெயமணி மீது கார் மோதிய விபத்தில் பலியானார்.தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெரு ஜெயமணி 27. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த வீருச்சாமி மகள் திவ்யாவிற்கும் 24. கடந்தாண்டு திருமணம் நடந்தது. செங்குளத்துப்பட்டி மாளிகைப்பாறை கருப்பசுவாமி கோயில் பிரிவில், தந்தை பழனி தோட்டத்து வீட்டுக்கு செல்ல ஜெயமணி ரோட்டை கடந்து சென்றுள்ளார்.திண்டுக்கல்லிருந்து தேனி நோக்கி சென்ற கார் ஜெயமணி மீது மோதியது. தலையில் காயமடைந்த ஜெயமணி பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஜெயமணி வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய தேனி ரத்தினம் நகரைச் சேர்ந்தசபேஷ்ஷிடம் 32. விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை