உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆன்லைன் டிரேடிங்: இரு ஆண்டுகளில் 107 புகார்கள்: சைபர் கிரைம் போலீசார் தகவல்

 ஆன்லைன் டிரேடிங்: இரு ஆண்டுகளில் 107 புகார்கள்: சைபர் கிரைம் போலீசார் தகவல்

தேனி: மாவட்டத்தில் ஆன்லைன் டிரேடிங், ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி ஏமாற்றியது தொடர்பாக கடந்த இரு ஆண்டுகளில் 107 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது, வர்த்தகம், வேலைவாய்ப்பு, டிஜிட்டல் கைது ஆகியவற்றில் சிலர் பணத்தை இழப்பது வாடிக்கையாக உள்ளது. இது பற்றி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'கடந்த இரு ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகத்தில் பலர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக 107 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ரூ.6 கோடிக்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர். இதில் ரூ.50 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சிலரை மட்டும் கைது செய்துள்ளோம். பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிரமம் உள்ளது. காரணம் இந்த வகை மோசடியில் ஈடுபடுபவர்கள் வெளிநாடுகளில் இருந்து ஈடுபடுகின்றனர். அவர்களை பிடிக்கவும் முயற்சிகள் செய்து வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை