உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நீதிமன்றத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

 நீதிமன்றத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறையினை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன், அமர்வு நீதிபதி அனுராதா திறந்து வைத்தனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த அறை பயன்பாட்டிற்கு வந்தது. உள்ளக புகார் குழு பராமரிப்பில் இந்த அறை செயல்பட உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் அவசர மருத்துவ சிகிச்சை மையம், நுாலகம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார். விழாவில் நிரந்தர மக்கள் நீதிமன்ற சேர்மன் ரஜினி, போக்சோ அமர்வு நீதிபதி கணேசன், பெரியகுளம் கூடுதல் மாவட்ட நீதிபதி சங்கர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணக்குமார், சார்பு நீதிபதி கீதா, இலவச சட்ட உதவி மைய நிர்வாகி பரமேஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி அலெக்ராஜ், நீதித்துறை நடுவர்கள் ஆசைமருது, ஜெயபாரதி, வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை