அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு
கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் உள் மற்றும் வெளிநோயாளிகள் வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் உள்ளது. ரூ.10 கோடியில் பிரசவ மேம்பாட்டு பிரிவிற்கு 3 மாடிகளை கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனை, டாக்டர்கள், பணியாளர் பாதுகாப்பு கருதி கம்பம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் புறக்காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. உத்தமபாளையம் டி. எஸ்.பி. செங்கோட்டு வேலன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, மருத்துவ அலுவலர் பொன்னரசன் உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.