உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் தகராறு

பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் தகராறு

பெரியகுளம், : பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, அணிகளுக்கு இடையே பிளக்ஸ் வைப்பதில் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் மூன்றாந்தல் தேவர்சிலை அருகே பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிளக்ஸ் போர்டு வைப்பதில் நேற்று இரவு 9:00 மணி முதல் 9:30 வரை மோதல் ஏற்படும் சூழல் உருவானது. டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி