மேலும் செய்திகள்
முள்ளிப்பள்ளத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு
31-May-2025
தேனி -: தேனி நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் அரசு துறைகள் ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.மாவட்ட தலைநகராக தேனி உள்ளது. தினமும் வணிகம், கல்வி, மருத்துவம் என ஆயிரக்கணக்கானவர்கள் தேனி நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். நகரில் நேரு சிலையை சுற்றி உள்ள மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.முகூர்த்த நாட்கள், விஷேச தினங்கள் மட்டும் இன்றி தினமும் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார்தவிக்கின்றனர்.ஆனால் இந்த மூன்று ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் இப்பிரச்னைக்கு தீர்வு காண இயலும். ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம், மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது கண் துடைப்பிற்காக அகற்றுகின்றனர்.அகற்றிய இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் இடம் பிடித்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஒரு துறை அதிகாரிகள் வந்தால் மற்ற துறையினர் வருவதில்லை. கலெக்டர், துறைகளின் உயர் அதிகாரிகள் இவ்வழியாக சென்று வந்தாலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்துவது இல்லை. மேலும் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் தேனி நகர் பகுதி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
31-May-2025