உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் கழிவுகள்மக்கள் புகார்

வைகை அணையில் கழிவுகள்மக்கள் புகார்

தேனி: தேனி அருகே சொக்கத்தேவன்பட்டி, சக்கரப்பட்டி, சாவடிபட்டி கிராம பொதுமக்கள் சார்பில் மணிகண்டன், வாசுதேவன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் மனு வழங்கினர். மனுவில், 'வைகை அணையில் மீன்பிடி குத்தகையை தனியார் எடுத்துள்ளனர். அவர்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைலை விட கூடுதால விலையில் விற்பனை செய்கின்றனர். நீண்டகாலமாக மீன்பிடித்து வந்த மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். அணையில் கோழி, மீன் இறைச்சி கழிவுகளை கொட்டி மாசுபடுத்துகின்றனர். இதனால் நீரை பயன்படுத்துவோர் பாதிக்கும் அபாயம் உள்ளது. மீன்பிடி குத்தகை தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ