உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளம் டி.எஸ்.பி., பணியிடம் காலி சட்டம் -ஒழுங்கு பாதிக்கும் அபாயம்

பெரியகுளம் டி.எஸ்.பி., பணியிடம் காலி சட்டம் -ஒழுங்கு பாதிக்கும் அபாயம்

பெரியகுளம்,: பெரியகுளத்தில் டி.எஸ்.பி., பணியிடம் ஒரு மாதம் காலியாக இருப்பதால் தாலுகாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளாக பெரியகுளம் தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் 4 இன்ஸ்பெக்டர்கள், 20 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், நூற்றுக்கும் அதிகமான போலீசர்கள் உள்ளனர். பெரியகுளம் டி.எஸ்.பி., கீதா, கடந்த மாதம் 27 ல் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றார்.இங்கு தேனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் டி.எஸ்.பி., சக்திவேல், அவரைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., கருணாகரன் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக பணி ஏற்றனர். என்ன காரணத்தினாலோ அவசர கதியில் பொறுப்பில் இருந்து விடுபட்டனர்.இவர்களை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடு டி.எஸ்.பி., ஞானரவி தற்போது உள்ளார்.பெரியகுளம் சப்-டிவிஷனில் உள்ள தேவதானப்பட்டி ஜெயமங்கலம், குள்ளப்புரம், தென்கரை, கெங்குவார்பட்டி ஆகிய ஊர்களில் எப்போது என்ன பிரச்னை எழும் என யுகிக்க முடியாத பகுதிகளாககும். இதுபோன்ற சென்சிடிவ் நிறைந்த பெரியகுளம் பகுதியில் டி.எஸ்.பி., ஒரு மாதமாக இல்லாதது அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது. விரைவில் நிரந்தரமாக டி.எஸ்.பி., பணியிடம் நிரப்புவதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி