உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  போலீஸ் செய்தி...

 போலீஸ் செய்தி...

கல்லுாரி மாணவி மாயம் ஆண்டிபட்டி: நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் நாராயணன் மகள் மஞ்சுளாதேவி 18, பெரியகுளம் தனியார் கல்லூரியில் பி.காம்., படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பெரியம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்றவர் கைது ஆண்டிபட்டி: அருகே டி. புதூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். ஈஸ்வரன் கோயில் அருகே டி.புதூரைச் சேர்ந்தவர் சந்தேகப்படும்படி நின்றிருந்தார். விசாரித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த ரித்திக் 23, என்பது தெரிய வந்தது. ரூ.1200 மதிப்பிலான கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ