உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொங்கல் விழா பட்டிமன்றம்

பொங்கல் விழா பட்டிமன்றம்

தேனி : தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை, பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் விஸ்வ வித்யாலயம் சார்பில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. செயலர் தாமோதரன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ரதிதேவி வரவேற்றார். முதல்வர் சீனிவாசன் வாழ்த்தினார். பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம், தமிழ்த்துறை தலைவர் ஜெயக்குமார், தேனி கிளை பொறுப்பாளர் செல்வராஜ், பிரகாஷ்ராஜ் பேசினர். பேராசிரியை தனலட்சுமி, மகிழ்ச்சியும் மன நிறைவும் அளிப்பது வயல்வழி காலமா வாட்ஸ் அப் காலமா' என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தில் நடுவராக பங்கேற்றார். துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பிரம்மகுமாரிகள் அமைப்பினர் இரு அணிகளாக பேசினர்.மகிழ்ச்சியும், மனிநிறைவும் பெறுவது அவரவர் மனநிறைவை பொறுத்தது என தீர்ப்பு வழங்கப்பட்டது. பேராசிரியர் தாழைச்செல்வி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை