உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வைத்தியநாத சுவாமி கோயில் தேர் புதுப்பிக்கும் பணிக்கு பூஜை

 வைத்தியநாத சுவாமி கோயில் தேர் புதுப்பிக்கும் பணிக்கு பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் வைத்தியநாத சுவாமி கோயில் தேரினை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் உபயத்தால் புதுப்பிக்கும் பணிபூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. பெரியகுளம் கீழவடகரை தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் மலைமேல் உள்ளது. நூற்றாண்டு பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக் கோயிலுக்கு சொந்தமான தேர் வடகரை தேரடி திடலில் நிறுத்தப்பட்டிருந்தது. பராமரிப்பின்மையால் 45 ஆண்டுகள் வீதி உலா செல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டது. பெரியகுளம் பகுதி மக்கள் தேரினை சீரமைக்க வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறைக்கு பல முறை கோரிக்கை வைத்தனர். புதுப்பிக்கும் பணி துவக்கம்: தேர் புதுப்பிக்கும் பணி நேற்று துவங்கியது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தேர் சக்கரங்கள் பொருத்தி புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அறநிலையத்துறையினர் தேர் நிலையம் அமைக்க ரூ.13 லட்சம் மதிப்பீடு செய்துள்ளனர். தேரின் சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரானது. முன்னதாக தேரடி வீதியிலிருந்து பல டன் எடையுள்ள தேர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் தூக்கி, ஆடுபாலம் அருகே வடகரை வைத்தியநாத சுவாமி கோயில் எதிர்புறம் வைக்கப்பட்டது. அடுத்த மாதம் வைத்தியநாத சுவாமி கோயில் திருப்பணிகள் துவங்க உள்ளது. வரும் பங்குனியில் தேர் வெள்ளோட்டமும், சித்திரை மாதம் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர் புதுப்பிக்கும் பணிக்கான பூஜையில் ஹிந்து அறநிலையத்துறை செயற்பொறியாளர் ராஜராஜன், உதவி செயற்பொறியாளர் சுகுமார், ஸ்தபதி ஜெயராமன், செயல் அலுவலர் சுந்தரி, பாலசுப்பிரமணியர் கோயில் திருப்பணிக்குழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரிய வேலு, நகராட்சி தலைவர் சுமிதா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ