உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு துவக்கம்

தேனி : பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 144 மேல்நிலைப்பள்ளிகளில் 13,542 மாணவர்கள் பிளஸ் 2 படிக்கின்றனர். பிளஸ் 2ல் தாவரவியல், விலங்கியல், உயிரியியல், வேதியியல், இயற்பியியல், மைக்ரோபயாலஜி, நர்சிங், வேளாண், அலுவலக மேலாண்மை, கணினி அறிவியல், அடிப்படை இயந்திரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது. மாவட்டத்தில் 98 மையங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் நடக்கிறது. இத்தேர்வுகள் பிப்.,17 வரை நடக்கிறது. தொடர்ந்து பிப்., 19ல் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்