உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுல்லக்கரை நீர்வரத்து ஓடையில் கழிவு நீர் கலப்பதற்கு எதிர்ப்பு

சுல்லக்கரை நீர்வரத்து ஓடையில் கழிவு நீர் கலப்பதற்கு எதிர்ப்பு

கூடலுார்: கூடலுார் சுல்லக்கரை நீர்வரத்து ஓடையில் கழிவுநீர் கலப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மழை நீர் வெளியேறுவதற்காக சுல்லக்கரை ஓடை உள்ளது. ராஜீவ் காந்தி நகர், புது பஸ் ஸ்டாண்ட், ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு போலீஸ் ஸ்டேஷன், சுக்காங்கல்பட்டி வழியாக இந்த ஓடையில் மழை நீர் வெளியேறி முல்லைப் பெரியாற்றில் கலக்கும்.கனமழை பெய்யும் போது வெளியேறும் காட்டாற்று வெள்ளநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பலமுறை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நகராட்சி சார்பில் சமீபத்தில் இந்த ஓடை ஆழப்படுத்தி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த ஓடையில் கலக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. கழிவு நீர் கலப்பதால் மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் விளைநிலங்களுக்கு ஓடை வழியாக விவசாயிகள் நடந்து செல்வதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் கழிவுநீர் கலக்கும் வகையில் நடந்துவரும் பணியை உடனடியாக நிறுத்தக் கோரி நகராட்சி கமிஷனர், உத்தமபாளையம் தாசில்தார், ஆர்.டி.ஓ., கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை