உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேங்கும் கால்வாய் நீரால் நோய் பரவும் அபாயம்

தேங்கும் கால்வாய் நீரால் நோய் பரவும் அபாயம்

ஆண்டிபட்டி : அம்மச்சியாபுரம் குடியிருப்புப் பகுதியில் குளம் போல் தேங்கி வரும் கால்வாய் நீரால் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதுடன் வீடுகளின் உறுதித் தன்மையும் பாதிப்படைகிறது.ஆண்டிப்பட்டி அருகே அம்மச்சியாபுரத்தில் ராஜவாய்க்காலின் கிளை வாய்க்கால் உள்ளது. இது ஆக்கிரமிப்பில் உள்ளது. கிளை வாய்க்காலில் வரும் நீர் அப்பகுதி கிணறுகள் வழியாக ஊற்றெடுத்து பள்ளமான குளம் போல் தேங்குகிறது. இந்த நீரை கடத்த வடிகால் வசதி இல்லை. குடியிருப்புகளில் உள்ளவர்கள் தேங்கிய நீரை கடந்து அன்றாடம் வெளியில் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. மேலும் கால்நடைகளை கட்டி வைத்து, பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சிறு குழந்தைகள், வயதானவர்கள் பாதிப்படைகின்றனர். நோய்தொற்று ஏற்படும் முன், தேங்கும் நீரை கடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை