உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர் வீட்டில் ரூ. 40 லட்சம் நகை கொள்ளை

ஆசிரியர் வீட்டில் ரூ. 40 லட்சம் நகை கொள்ளை

சின்னமனுார், ஆக. 14- தேனி மாவட்டம் சின்னமனுார் ஓடைப்பட்டி ரோடு மின்நகரில் வசிப்பவர் ராஜா. இவரது வீட்டின் தரைத் தளத்தில் க.புதுப்பட்டி தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகதீசன், மனைவி புனிதாவுடன் வசிக்கிறார். புனிதா , ஓடைப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். நேற்று காலை இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் மதியம் வீட்டின் உரிமையாளர் ராஜா மாடியிலிருந்து இறங்கி வந்த போது ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. இதையடுத்து கணவன், மனைவி வீட்டிற்கு வந்து பார்த்த போது மர்ம நபர்களால் பீரோ உடைக்கப்பட்டு ரூ.40லட்சம் மதிப்பு 66 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை