| ADDED : நவ 21, 2025 05:17 AM
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு வார விழா கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது. எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கால்நடை பராமரிப்புக்கடன், சிறுவணிக கடன், வீட்டு அடமான கடன் உட்பட 1,141 பயனாளிகளுக்கு ரூ. 11.16 கோடி மதிப்பில் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் டி.ஆர்.ஓ., ராஜகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தேனி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவார் நர்மதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் இளங்கோ, ஆவின் பொது மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.