உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநாடு

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநாடு

தேனி: தேனி பங்களா மேட்டில் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் மேல்நிலைதொட்டி இயக்குபவர்களுக்கும் வழங்க வேண்டும். துாய்மை பாரத திட்டத்தில் வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிபவர்களை நீதிமன்ற தீர்ப்பின் படி நிரந்தர காலி பணியிடத்தில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில தலைவர் ராமநிதி, மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் பேயத்தேவன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகநாதன், பெருமாள், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை