உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சாமாண்டியம்மன் கோயில் பாலாலயம்

 சாமாண்டியம்மன் கோயில் பாலாலயம்

கம்பம்: கம்பம் அருகே உள்ள சாமாண்டியம்மன் கோயில் திருப்பணிகள் செய்ய இருப்பதை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் பாலாலயம் நடைபெற்றது. கம்பம் அருகே 800 ஆண்டுகள் பழமையான சாமாண்டியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நாடு சுதந்திரமடைவதற்கு முன் 1938 ல் நடந்துள்ளது. 87 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை கோயில் வளாகத்தில் எம்.எல்.ஏ.,ராமகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சிகள் துவங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பாலாலய நிகழ்ச்சிகளில் தக்கார் பொன்முடி, ஆய்வாளர் செல்லம் (நத்தம்) மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், உபயதாரர் நாராயணசாமி, நித்திய படி பரம்பரை அறங்காவலர் லட்சுமணக்குமார், பரம்பரை பூஜாரிகள் மற்றும் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை