உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முட்டையில் நைட்ரோபியுரான் எனும் மூலக்கூறு உள்ளதா மாதிரிகள் சேகரிப்பு

 முட்டையில் நைட்ரோபியுரான் எனும் மூலக்கூறு உள்ளதா மாதிரிகள் சேகரிப்பு

தேனி: பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள முட்டையில் உடலுக்கு தீங்கிழைக்கும் நைட்ரோபியுரான் பாக்டீரியா மூலக்கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய தேனி மாவட்டத்தில் முட்டை கடைகள், ஓட்டல்களில் மாதிரிகள் சேகரித்து பெங்களூருவ தர் நிர்ணய ஆய்வகத்திற்கு மாவட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். கோழி, பன்றி, இறால், குட்டையில் வளர்க்கப்படும் மீன்கள், உணவுக்காக வளர்க்கப்படும் பறவை, விலங்கினங்களில் தொற்று நோய்களை தவிர்க்க நைட்ரோபியூரான்'என்னும் ஆன்டிபயாடிக் மருந்து பயன்படுத்தப்படுகின்றன. அதனை மனிதர்கள் உண்ணும் போது, அந்த மருந்து உடலில் நீண்ட காலம் தங்கி புற்றுநோய் மற்றும் மரபணுக்களில் சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியது என கண்டறியப்பட்டது. இந்நிலையில் கர்நாடகா நிறுவனம் வினியோகித்த முட்டையில் இந்த ஆன்டிபயாடிக் மருந்தின் மூலக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் அங்கு ஓட்டல்கள், முட்டைகடைகள் உற்பத்தி மையங்களில் மாதிரிகள் சேகரித்து பெங்களூருவில் உள்ள உணவுப் பொருட்களின் தர் நிர்ணய ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சாய்தீபா தலைமையிலான அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் தொடர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 20 முட்டை மாதிரிகளை சேகரித்து பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். அறிக்கை முடிவில் பாதிப்பு இருந்தால் கலெக்டர் பரிந்துரையில் கடை உரிமம் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்