| ADDED : மார் 14, 2024 04:50 AM
தேனி: தமிழகத்தில் கோடை காலத்தில் எள், உளுந்து, சன்னரக நெல், சிறுதானியம் சாகுபடி பரப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை காலத்தில் தண்ணீரின் அளவு குறைவாக இருக்கும். கோடை மழை பொழிவிற்கும் வாய்ப்புள்ளதால் மாவட்டந்தோறும் சன்னரகநெல், பயிறு வகை பயிரில் உளுந்து, எண்ணெய் வித்துக்களில் எள், சிறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறையினருக்கு முதன்மை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டந்தோறும் இதற்கு உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், இவ்வகைப்பயிர்கள் குறைந்த அளவு நீரில் பயிரிடப்படுபவையாகும். கோடையில் இவை பயிரிடப்படுவதால் சாகுபடி பரப்பு கூடுவதுடன், உணவு உற்பத்தியும் அதிகரிக்கும். இத்திட்டம் செயல்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.