உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பெரியகுளம் : பெரியகுளம் அருகே செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 41 வது ஆண்டு விழா நடந்தது. எஸ்.டி.ஏ., குழும மண்டல அதிகாரி பூமிநாதன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் எட்வின்நேசஸ், துணை முதல்வர் வீரன் முன்னிலை வகித்தனர். கவிஞர் ராகவன், பொருளாளர் கில்பர்ட் ஜோசப், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், துணை தலைவர் ராதா, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களையும், பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள், அனைத்து பள்ளி நாட்களிலும் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 'மது போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்' உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ