உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாயை தாக்கிய மகன் கைது

தாயை தாக்கிய மகன் கைது

போடி: போடி டி.வி.கே.கே., நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வடிவேல் குமார் 28. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினம் தோறும் மது குடித்துள்ளார். தினமும் மது குடிக்க தாயார் சாந்தியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். பணம் தராத போது தாயார் என்று கூட பாராமல் தகாத வார்த்தையால் பேசி அடித்து துன்புறுத்தினார். நேற்று முன்தினம் சாந்தியின் அலைபேசியை எடுத்து விற்பனை செய்து மது குடித்துள்ளார். இது சம்பந்தமாக மகனை சாந்தி திட்டி கேட்டு உள்ளார். ஆத்திரம் அடைந்த வடிவேல்குமார் தாயாரை அடித்து காயப்படுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். வீட்டின் அருகே வசிப்பவர்கள் சத்தம் போடவும் அங்கிருந்து சென்றுள்ளார். தாயார் சாந்தி புகாரில் போடி டவுன் போலீசார் வடிவேல் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை