மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
08-Jan-2025
தேனி: புதுச்சேரியில் ஜன.,21ல் நடைபெற உள்ள தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு (எஸ்.ஐ.எஸ்.எப்.,) தேனி ஸ்ரீரங்காபும் எஸ்.ஆர்.ஜி., பள்ளி மாணவர் கனிஷ்கர், அறிவியில் ஆசிரியர் உஸ்மான் அலி தேர்வாகி உள்ளனர்.கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் 8,9,10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்ட அளவிலான மாணவர்கள் தேர்வு தேனியில் நவ.,ல் நடந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்கள் திருச்சி பிஷப்ஹீபர் கல்லுாரியில் நடந்த கண்காட்சியில் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தினர். ஒரு மாணவர் ஒரு ஆசிரியர் பிரிவில் தேனி ஸ்ரீரங்காபும் எஸ்.ஆர்.ஜி., பள்ளி 8 ம் வகுப்பு மாணவர் கனிஷ்கர், ஆசிரியர் உஸ்மான் அலி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் நீர், பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் கண்டுபிடிப்பை காட்சிபடுத்தினர். இவர்கள் புதுச்சேரியில் ஜன.,21 முதல் 26 வரை நடக்க உள்ள தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.
08-Jan-2025