உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாநில வாலிபால் போட்டி: கம்பம் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

 மாநில வாலிபால் போட்டி: கம்பம் சி.பி.யூ., மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

கம்பம்: தேனியில் நடைபெற்ற மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கிடையேயான வாலிபால் போட்டியில் கம்பம் சிபியூ மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், பப்ளிக் பள்ளிகள் பங்கேற்ற மாநில வாவிபால் - போட்டி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 16 பள்ளிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதி போட்டியில் கம்பம் சிபியூ மேல்நிலைப்பள்ளியும், தேனி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் மோதின. இந்த போட்டியில் 23 :- 25, 25 :- 21, 25 :- 23 என்ற புள்ளி கணக்கில் சிபியூ மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில் ஓடைப்பட்டி, வடுகபட்டி அரசுமேல் நிலைப் பள்ளி அணிகள் மோதியது. இதில் 25 :- 16, 25 :- 18 என்ற நேர் செட் கணக்கில் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. இறுதி போட்டியில் கம்பம் சிபியூ மேல் நிலைப்பள்ளி, வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதியது. இதில் 25 :- 23, 21 :- 25, 25 : 23 என்ற புள்ளிக் கணக்கில் சிபியூ மேல் நிலைப் பள்ளி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. வடுகபட்டி இரண்டாம் இடமும், வேலம்மாள் பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன. சாம்பியன் பட்டம் பெற்ற சிபியூ பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன், பொருளாளர் ராமசாமி , தலைமையாசிரியர் சையது அபுதாகிர் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள் - பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் ஆசிக், உடற்கல்வி ஆசிரியர் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை