உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ஊர்காவலன் மனைவி மேனகா 37. இவர் வீட்டில் ஏழு ஆடுகளை வளர்த்து வந்தார். மதுரையில் உடல்நிலை சரியில்லாத தாயாரை பார்த்துவிட்டு திரும்பினார். ஏழு ஆடுகளில், ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள 4 ஆடுகள் திருடுபோனது. ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ