உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆற்றில்குளிக்க சென்ற மாணவர் மாயம்

 ஆற்றில்குளிக்க சென்ற மாணவர் மாயம்

தேனி: தேனி சுப்பன்செட்டி தெரு தொழிலாளி அழகர்சாமி. இவரது மகன் அர்ஜூன் 14. அரசு உதவி பெறும் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அழகர்சாமி வேலைக்குச் சென்றார். விளையாட செல்வதாகக் கூறி விட்டுச் சென்ற அர்ஜூன் வீடு திரும்பவில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். மாணவர் நண்பர்களுடன் பென்னிகுவிக் நகர் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்றது தெரியவந்தது. அந்த பகுதியில் போலீசார் தீயணைப்புத்துறை வீரர்களுடன் அவரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி