உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில வளைபந்து போட்டியில் வெண்கலம் வென்ற மாணவர்கள்

மாநில வளைபந்து போட்டியில் வெண்கலம் வென்ற மாணவர்கள்

கம்பம்: பள்ளிகளுக்கிடையேயான மாநில வளைபந்து போட்டி தர்மபுரியில் ஜன 10 முதல் 13 வரை நடந்தது.பல்வேறுபிரிவுகளில் 96 அணிகள் மோதியது.இப்போட்டியில் ஜூனியர் இரட்டையர் பிரிவில் கம்பம் சிபியூமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ருத்ரன், லத்தீஸ் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றனர். இரட்டையர் மகளிர் பிரிவில் மாணவிகள் ரியாஸ்ரீ, காவியா வெண்கல பதக்கம் வென்றனர்.போட்டிகளில் சாதனை படைத்த மாணவ,மாணவியர்களை பள்ளிதாளாளர் திருமலைசந்திரசேகரன், பொருளாளர் ராமசாமி, தலைமையாசிரியர் சையதுஅப்தாகீர் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் ஆசிக், உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்