உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: கூடலுாரில் விபத்து அபாயம்

தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்: கூடலுாரில் விபத்து அபாயம்

கூடலுார்: கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் வட்ட வடிவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கில் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் வட்ட வடிவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு முன்பு அப்பகுதியில் கிணறு இருந்துள்ளது. இதனை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் சாலை அமைத்ததால் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரள எல்லையில் அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம். நீண்ட தொலைவில் இருந்து வேகமாக செல்லும் வாகனங்கள் திடீர் பள்ளத்தால் நிலை தடுமாறி செல்கிறது. மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைப்பதுடன் உடனடியாக சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. அதை நிரந்தரமாக சீரமைக்காமல் அரைகுறையாக சீரமைத்ததால் இரண்டாவது முறையாக பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை