உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  திருச்செந்துாருக்கு அதிவிரைவு பஸ்

 திருச்செந்துாருக்கு அதிவிரைவு பஸ்

தேனி: தேனியில் இருந்து திருச்செந்துாருக்கு அதி விரைவு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அதிவிரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) சார்பில் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியாரை விட குறைந்த கட்டணம், குறைவான நிறுத்தங்கள் என்பதால் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர். கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி அதிவிரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'புதிதாக சில பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அதில் தேனியில் இருந்து மதுரை வழியாக திருச்செந்துாருக்கு எஸ்.இ.டி.சி., பஸ் இயக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் இருப்பு பொருத்து மற்ற நகரங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை