சுவாமி கும்பிடுவதில் பிரச்னை தாசில்தார் பேச்சுவார்த்தை
தேவதானப்பட்டி: குள்ளப்புரம் மருதகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதில் பிரச்னை ஏற்பட்டது. தாசில்தார் மருதுபாண்டி பேச்சுவார்த்தைக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டது. பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் மருதகாளியம்மன் கோயில், ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கோயிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனால் கோயில் பூட்டப்பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் நேற்று சாமி கும்பிடுவதற்கு கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர். கோயில் திறப்பதற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குள்ளப்புரம் ரோட்டில் ஒரு தரப்பினர் சிறிது நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு, தாசில்தார் மருதுபாண்டி ஆகியோர் மற்றொரு சமுதாயத்தினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கோயில் சிறிது நேரம் திறக்கப்பட்டது. குள்ளப்புரம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.