உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா

 தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா

தேனி: தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனித நேய காப்பகத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடந்தது. காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, புத்தாடை வழங்கப்பட்டது. அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜன் வரவேற்றார். போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் நிஷாந்த், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாசித் ரஹ்மான், கண்ணன், முகமது ரபீக், ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை அயலக அணி மாவட்ட அமைப்பாளர்கள் செய்திருந்தனர். ஆண்டிபட்டி: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா நடந்தது. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே கூடிய தி.மு.க., வினர் அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். டி.சுப்புலாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா, நகர செயலாளர் சரவணன், ஆண்டிபட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை