| ADDED : செப் 30, 2011 01:30 AM
பெரியகுளம் : வடுகபட்டி பேரூராட்சி தலைவருக்கு தி.மு.க., வேட்பாளர் கண்ணகி வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரூர் செயலாளர் செல்லமணி உட்பட பலர் இருந்தனர். இவருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர்., கழகம் பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் பெத்துராஜ், முன்னாள் கவுன்சிலர் சுப்புராஜ் பிரசாரம் செய்தனர். * தாமரைக்குளம் பேரூராட்சி தலைவருக்கு தி.மு.க., வேட்பாளர் மைதிலி வேட்புமனு தாக்கல் செய்தார். ஒன்றிய செயலாளர் போஸ், முன்னாள் பேரூராட்சி தலைவர் அன்பழகன், பேரூர் செயலாளர் கருத்தராசு பங்கேற்றனர்.* தாமரைக்குளம் பேரூராட்சி தலைவருக்கு அ.தி.மு.க., வேட்பாளர் ராமதண்டபாணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.* தாமரைக்குளம் பேரூராட்சி தலைவருக்கு முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பொன் சேதுராமன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.* தாமரைக்குளம் பேரூராட்சி தலைவருக்கு தே.மு.தி.க., வேட்பாளர் சுரபிபாண்டியராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாநில துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சந்தானம், பேரூர் செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* தென்கரை பேரூராட்சி தலைவருக்கு தி.மு.க., வேட்பாளர் காமராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரூர் செயலாளர் செல்வக்குமரன், பொதுக்குழு உறுப்பினர் முருகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* தென்கரை பேரூராட்சி தலைவருக்கு அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரூர் செயலாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.