உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுச்சீட்டு கிழித்த வழக்கில் தி.மு.க., வேட்பாளர் சீமான் : 2006ல் ஜெ.,வை எதிர்த்தவர் கைது

ஓட்டுச்சீட்டு கிழித்த வழக்கில் தி.மு.க., வேட்பாளர் சீமான் : 2006ல் ஜெ.,வை எதிர்த்தவர் கைது

ஆண்டிபட்டி : 2006 தேர்தலில் ஆண்டிபட்டியில் ஓட்டுச்சீட்டுகளை கிழித்த வழக்கில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் 2006ல் அ.தி.மு.க.,வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து சீமான்(தி.மு.க.,)(60)போட்டியிட்டார். ஓட்டுப்பதிவின்போது ராஜேந்திரா நகர் ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டுப்போட்டதாக பிரச்னை எழுந்தது. சீமான் மற்றும் சிலர் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்தனர். ஓட்டுச்சீட்டுக்களை கிழித்து, ஓட்டுப்பெட்டியை உடைத்தனர். சீமான் மற்றும் தி.மு.க.,பிரமுகர் பாண்டிமீது கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின்போது பாண்டி கோர்ட்டில் ஆஜரானார். சம்மன் அனுப்பியும் சீமான் ஆஜராகவில்லை.

கைது: இவ்வழக்கில் சீமானை கண்டமனூர் போலீசார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர். ஆண்டிபட்டி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட சீமானை, நீதித்துறை நடுவர் சுந்தரராஜன் ரிமான்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை