உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு விபரம் சேகரிக்க நடவடிக்கை

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு விபரம் சேகரிக்க நடவடிக்கை

தேவதானப்பட்டி : கிராமங்களில், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு விபரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் உள்ள மேய்ச்சல் நிலங்கள், ஊரணி, குளம், புறம்போக்கு, வண்டிப்பாதை, ஓடை, கல்குட்டை, மயானம், ஊராட்சி ஒப்படைப்பு நிலங்கள், ஊராட்சிகளுக்கு சொந்தமான தோப்புகள், நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர் நடவடிக்கையாக, கிராம ஊராட்சிகளிடம், இதுபோன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்த விபரங்களை, வருவாய்த்துறையினர் கேட்டு வருகின்றனர். விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ