உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாதுகாப்பற்ற நிலையில் காளாத்தீஸ்வரர் தேர்

பாதுகாப்பற்ற நிலையில் காளாத்தீஸ்வரர் தேர்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேர் பாதுகாக்கப்படாத நிலையில் உள்ளது. தென் காளகஸ்த்தி எனப்படும் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் பழமை வாய்ந்தது. இக்கோயில் தேர், 90 ஆண்டுகளாக ஓடாமல் நிறுத்தப்பட்டிருந்தது. 2009 ல் திருத்தேர் புதிதாக செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேரடி திடலில் நிறுத்தப்பட்டுள்ள, தேருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. தேரை சேதப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில், திறந்த நிலையில் உள்ளது. பல லட்சம் செலவிட்டு அமைக்கப்பட்ட இத்தேர் பொழிவை இழக்கும் அபாயம் உள்ளது. தேர் நிறுத்தும் இடத்தில் தகர செட் அமைத்து, பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை