உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரட்டை வார்டு ஓட்டுச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலில் அறிமுகம்

இரட்டை வார்டு ஓட்டுச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலில் அறிமுகம்

தேனி : உள்ளாட்சி தேர்தலில் இரட்டை வார்டு ஓட்டுச்சாவடிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இரட்டை உறுப்பினர் வார்டுகள் ஒரு உறுப்பினர் வார்டாக பிரிக்கப்பட்டுள்ளன. கிராம வார்டுகளில் குறைந்த பட்சம் வார்டிற்கு 150 முதல் அதிக பட்சம் 800 ஓட்டுகள் வரை உள்ளன. ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில், ஒரே ஓட்டுச்சாவடியில் இரண்டு வார்டுகளை சேர்ந்தவர்கள் ஒட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஒரே ஓட்டுச்சாவடிக்குள் இரு இடங்களில் தனித்தனியாக ஓட்டு பெட்டிகள் வைக்கப்படும். கூடுதல் அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ