உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண் மூடி திறப்பதற்குள் அலுவலரின் டூவீலர் அபேஸ்

கண் மூடி திறப்பதற்குள் அலுவலரின் டூவீலர் அபேஸ்

பெரியகுளம்: கண்ணில் தூசி விழுந்ததை தண்ணீரில் சுத்தம் செய்த நொடியில் வங்கி அலுவலர் சந்தனபீர் ஒலியின் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான டூவீலர் திருடுபோனது. தேனி சுப்பன் தெருவை சேர்ந்தவர் சந்தன பீர் ஒலி 55. இவர் தேனி ஸ்டேட் பாங்கில் அலுவலராக பணிபுந்து வருகிறார். வத்தலக்குண்டில் தனது நண்பரை பார்க்க டூவீலரில் தேனியிலிருந்து, பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு, எ.காமாட்சிபுரம் தர்ஹா ஒலியுல்லா பள்ளிவாசல் அருகே சென்றுள்ளார். அப்போது சந்தனபீர் ஒலி கண்ணில் தூசி விழுந்தது. கண் உறுத்தலில் அவதிப்பட்டார். சாவியுடன் டூவீலரை அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். அருகேயுள்ள தோட்டக்கலை நர்சரியில் தண்ணீர் வாங்கி, கண்ணை கழுவி தூசி அகற்றி பார்த்த போது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள டூவீலர் திருடுபோனது. டூவீலர் திருட்டுகளில் உச்சபட்ச நூதன திருட்டு இதுவாகும் என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை