தேனி : தேனி மாவட்டத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தி.மு.க., அறிவித்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை. பள்ளி-கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. மாவட்டத்தில் தி.மு.க.,வினர் போராட்டம், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடவில்லை. ஒரு சில இடங்களில் துண்டு பிரசுரங்களை மட்டும் பொதுமக்களுக்கு தந்தனர். பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டிருந்தது.
தள்ளுமுள்ளு:
* கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் தி.மு.க.,ஒன்றிய கிளைச்செயலாளர் ஜெயக்குமார், உள்ளிட்ட தி.மு.க., வினர், சமச்சீர் கல்வியை ஆதரித்து நோட்டீசை மாணவர்களுக்கு விநியோகித்தனர்.
தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.,முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலகுமார் தலைமையில் போலீசார், பிரச்னையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.