உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையின்றி மானாவாரி பயிர்கள் பாதிப்பு

மழையின்றி மானாவாரி பயிர்கள் பாதிப்பு

தேவாரம் : தேவாரம் பகுதியில் மழையில்லாததால் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், தம்மிநாயக்கன்பட்டி, சங்கராபுரம் பகுதியில் இரண்டாயிரம் ஏக்கரில் மானாவாரி விவசாயம் நடக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் சோளம், மக்காசோளம், எள் போன்ற தானியப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. நடவு செய்து ஒரு மாதம் கடந்த நிலையில் இப்பகுதியில் மழையில்லை. வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. நிலத்தில் ஈரப்பதம் இல்லாததால் பயிர்கள் வாடுகின்றன. மானாவாரி விவசாயிகள் கூறுகையில்,'ஏக்கருக்கு 5 முதல் 8 ஆயிரம் ரூபாய் செலவழித்து பயிரிட்டுள்ளோம். அடுத்த வாரத்திற்குள் மழை பெய்யாவிட்டால் பலனை எடுக்க முடியாது, என்றனர்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை