உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உள்ளாட்சி தேர்தல் பணியில் "மொபைல் ஆஸ்பத்திரி

உள்ளாட்சி தேர்தல் பணியில் "மொபைல் ஆஸ்பத்திரி

கம்பம் : உள்ளாட்சி தேர்தலின் போது 'மொபைல் ஆஸ்பத்திரி' யை இயக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் கணித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக 'மொபைல் ஆஸ்பத்திரி' தயாராகிறது.தாலுகாவிற்கு ஒரு மொபைல் ஆஸ்பத்திரி செயல்படும். டாக்டர், செவிலியர், தொழில்நுட்ப பணியாளர் ஒருவர், அவசர சிகிச்சைக்கு மருத்துவ பொருட்களுடன் வேனில் தயார் நிலையில் இருப்பார்கள்.பிரச்னை ஏற்படும் இடத்திற்கு மொபைல் ஆஸ்பத்திரி வேன் செல்லும். காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்சகாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை