உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விளையாட்டு விழா

விளையாட்டு விழா

ஆண்டிபட்டி:பெரியகுளம் கல்வி மாவட்ட விளையாட்டு விழா சக்ம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மேல்நிலை, உயர்நிலை, மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்த விழாவில் முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். பரிசளிப்பு விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,முகமதுஇப்ராகிம் பரிசுகள் வழங்கினார். இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மாயாண்டி, டி.எஸ்.பி., விஜயபாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனியாண்டி உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை